என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மும்பை ஆமதாபாத்
நீங்கள் தேடியது "மும்பை ஆமதாபாத்"
மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். #MumbaiAhmedabad #BulletTrain #FarmersProtest
ஆமதாபாத்:
மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த திட்டத்துக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்பதால், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.
இதுபற்றி விவசாயிகள் தரப்பு வக்கீல் ஆனந்த் யாக்னிக் கூறும்போது, “பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பதால் கடந்த 5 வாரங்களாக இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்க முடியவில்லை. எனவே ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த 1,000 விவசாயிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டை நாடி, இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோருவோம். மேலும் புதன்கிழமையன்று (இன்று) இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முறையிடுவோம்” என்று கூறினார். #MumbaiAhmedabad #BulletTrain #FarmersProtest

×

X